நமது நோக்கங்கள்

  • பல்வேறு விடயத்துறைகளுக்குரியதாக; “சிந்தனைக் களஞ்சியங்கள்” உருவாக்குவதற்கு; இலங்கை மக்களை ஒன்றிணைத்து; பலம்வாய்ந்த வெகுசன அமை​ப்பொன்றினைக் கட்டியெழுப்புதல் மற்றும் மேற்குறித்த பல்வேறான விடயத்துறைகளுக்கான தேசிய திட்டங்களைத் தயாரிப்பதற்கு பங்களிப்புச் செய்தல் மற்றும் அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொள்வதற்கான புதிய வாய்ப்புகளைக் கண்டறிதல்.

  • இலங்கை தற்பொழுது முகம் கொடுத்துள்ள கடன் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு; குறுகிய கால, இடைக் கால மற்றும் நீண்ட காலத் தீர்வுகளைக் கண்டறிவதற்காக; கடன்தரு நாடுகள், கடன்தரு நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய சகல தரப்பினருடனும் தொடர்ச்சியாக மேலும் கலந்துரையாடல்களை நடாத்திச் செல்வதற்கு; மேற்படி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டமொன்றினை உருவாக்கிக் கொள்வதற்கு; அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்குதல் மற்றும் பங்களிப்புச் செல்தல்.

  • பொதுமக்களின் பங்கேற்புடன் மற்றும் மக்களின் ஆசிர்வாதத்துடன்; இலங்கையை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு, தேசிய வேலைத்திட்டமொன்றினைத் தயாரித்தல் மற்றும் அரச மற்றும் தனியார் துறையுடன் இணைந்து; பாடசாலைகள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

  • வெளிநாடுகளின் அரசியலமைப்புகள், நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் அமைச்சுக்கள் தொடர்பில் விரிவான கற்கைகளை மேற்கொண்டு அவற்றின் உள்ளடக்கங்களை இலங்கைக்கு பொருந்தவைப்பதற்கான விசேட கற்கைகள் மற்றும் ஆராய்ச்சிக் குழுவொன்றினை நிறுவுதல் மற்றும் மேற்படி நிபுணர் குழுவினூடாக ஒவ்வொரு விடயத்துறைகளையும் இற்றைப்படுத்துதல் மற்றும் அபிவிருத்தி செய்தல், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் அந்நாட்டுப் பிரஜைகளின் ஒத்துழைப்பினை பொதுமக்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் குழுக்களுக்கு பெறுவதற்கான முறையான வேலைத்திட்டமொன்றினைத் தயாரித்தல்.

  • இலங்கையின் அபிவிருத்திக்குரியதாக பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பத்திரங்கள் மற்றும் ஒப்படைகளை வெளியிடுவதற்கு ஒத்துழைத்தல் மற்றும் அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டு அப்புதிய அறிவினை சமூகமயப்படுத்துவதற்கு ஒத்துழைத்தல்.

  • சகல பிரஜைகளுக்கும் இனம், மதம், சாதி, பால்நிலை வேறுபாடுகளின்றி அறிவினை அடிப்படையாகக் கொண்ட சமமான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவதனுடாக தேசிய நல்லிணக்கத்தினை உறுதிப்படுத்திய தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்தல்.

  • இலங்கையை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான உபாயமார்க்க முறைமைகளைத் தயாரித்தல்.

  • மக்களது பிரச்சினைகளை வெளிப்படையாக கலந்துரையாடி அப்பிரச்சினைகளுக்கு அறிவியல் ரீதியான தீர்வுகளைக் கண்டறிவதற்கு பிரதேச சபை மற்றும் தேசிய மட்டம் வரையில் அரங்குகளை அமைத்துக் கொடுத்தல் மற்றும் மக்களது தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் ஒழுங்குபடுத்துதல்.

  • சம்பிரதாயங்களுக்கு அப்பால் சிந்திப்பதற்கும் புதிய எண்ணக்கருக்களை நாட்டிற்குள் முன்வைப்பதற்கும் பொது மக்கள் மற்றும் ஒவ்வொரு விடயத்துறையுடன் தொடர்புடைய புத்திஜீவிகளை ஊக்குவித்தல் மற்றும் மக்களது தவறான மனப்பாங்குகளையும் தவறான பழக்க-வழக்கங்களையும் மாற்றுவதற்கு அவர்களை அறிவியல் ரீதியாக விழிப்புணர்வூட்டல் மற்றும் நாட்டைப் பற்றி சிந்திக்கின்ற, சுயநலமற்ற, கருணை மிக்க, மக்களை; ஆளுமை விருத்தியினூடாக உருவாக்குதல்.

  • பெரும்பான்மை மக்கள் கூட்டாக ஒன்றுசேர்ந்து குழு உணர்வுடன் செயற்படுவதற்கு பழக்கப்படுத்துதல் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் வரவுசெலவுத் திட்டத் தயாரிப்பிற்கு மக்களது பங்கேற்பினை பெற்றுக்கொடுத்தல்.

  • இலங்கையின் எதிர்காலம் பற்றிய தீர்மானங்களை மேற்கொள்கையில் பொதுமக்களின் செயற்றிறன்மிக்க பங்கேற்பினைப் பெற்றுக் கொள்வதற்கு அவர்களை ஊக்குவித்தல், போஷித்தல் மற்றும் பல்வகை அறிவால் அவர்களை அணிதிரட்டல்.

  • ஊடகங்களைப் பயன்படுத்தி; விசேடமாக சமூக ஊடக செயற்பாட்டாளர்களின் ஒத்துழைப்பினை உச்ச அளவில் பெற்று அரசியல் கட்சி ரீதியாக குழுக்களாக பிரியாமல்; அரசின் சகல செயற்பாடுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்காமல்; வேலை நிறுத்தங்களைச் செய்யாமல்; நிறைவுறாத வாத விவாதங்களை நடத்தாமல்; பயனற்ற வீணான தர்க்கங்களை முன்வைக்காமல்; பெறுமதிமிக்க நேரத்தை வெறுமனே வீணடிக்காமல்; பெரும்பான்மையினரின் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும்; நட்புடன் விவாதித்துக் கலந்துரையாடி பொது மக்களின் நலனுக்காக செயற்படும் வகையிலான இணக்கப்பாடுகளை எட்டும் வகையில் திட்டமிடுவோர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு சரியான விடயங்களை அறிவியல் ரீதியாக புரியவைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.

  • இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு செயற்றிறன்மிக்க வகையில் செயற்படுகின்ற சகல முயற்சியாளர்கள், நாட்டுக்காக அர்ப்பணிப்பு செய்யும் பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்கள், மாற்றுக் குழுக்கள் மற்றும் நபர்களுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்தி அவ்வமைப்புக்கள் மற்றும் நபர்களுடன் ஒன்றிணைந்து அவர்களுக்கு அவசியமான வழிகாட்டலையும் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொடுத்தல், அவர்களது கருத்துக்கள் மற்றும் யோசனைகளை எமது செயற்பாடுகளின் வளர்ச்சிக்காக பெற்றுக்கொள்ளல்.

  • வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு, இலங்கையிலும் மற்றும் நாட்டுக்கு வெளியிலும் அவர்களது உரிமைகளுக்காக வாதாடுதல் மற்றும் இலங்கையின் அபிவிருத்தியின் பொருட்டு அவர்களது பங்களிப்பினை நேரடியாக தொடர்புபடுத்துதல்.

  • உள்ளூராட்சித் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றினை நடாத்துவது தொடர்பிலும் அந்நிறுவனங்களுக்கு பிரதிநிதிகள் தெரிவு செய்தல்/ விலக்குதல் தொடர்பில் தற்பொழுதுள்ள நடைமுறை மற்றும் அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணைக்குழுவில் புதிதாக பதிவு செய்வது தொடர்பில் தற்பொழுதுள்ள நடைமுறை தொடர்பாக, சகல அரசியல் கட்சிப் பிரதிநிதிகளினதும் பொது மக்களினதும் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெற்று, திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக உத்தியோகத்தர்களை தெளிவூட்ட நடவடிக்கை எடுத்தல்.

  • மக்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் குழுக்களிடமிருந்து கிடைக்கின்ற தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு வரைவொன்றினையோ அல்லது சட்டரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு பங்களிப்புச் செய்து இதற்கு முன்னர் ஏற்பட்ட இனரீதியான, சமய ரீதியான பல்வேறான முரண்பாடுகள் மீள ஏற்படாதிருப்பதற்கு அவசியமான கட்டமைப்பு ரீதியிலான திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.

  • இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு, முதலில் இலங்கையின், சிங்களம், தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டிற்கு வருதல், இரண்டாவதாக, அதற்காக நீண்டகாலமாக பங்களிப்புச் செய்துள்ள ஏனைய தரப்பினருடன் நட்பு ரீதியான கலந்துரையாடலை ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தை தூண்டுதல் மற்றும் அதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துதல்.

  • வானொலி மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளிட்ட தொடர்பாடல் அலைவரிசைகள் மற்றும் இணையதள வசதிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் முறைமை தொடர்பில் பொது மக்களையும் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடாத்துவது மற்றும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பிலும் உரிய அதிகாரிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு நடவடிக்கை எடுத்தல்.

  • எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதற்கு பொருத்தமான கட்டமைப்பை தயாரித்துக் கொள்வதற்காக சட்டத்தை மதிக்கும், சட்டம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கு அர்ப்பணிப்பு செய்த, ஆக்கபூர்வமான தலைவர்களை நியமித்துக்கொள்வதற்கும், சட்டத்திற்குட்பட்ட நாடொன்றினை ஆக்கபூர்வமாக அபிவிருத்தி செய்வதற்கும், அரச நிதியை உச்ச அளவில் ஒழுக்கத்திற்குட்டதாக பொறுப்புக் கூறுவதற்கும், அரச செயற்பாடுகளை வெளிப்படைத்தன்மையுடன் பேணிச் செல்வதற்கும், ஊழலை எதிர்ப்பதற்கும், அதற்காக முக்கிய நிபந்தனைகளை தயாரிப்பதற்கும் பங்களிப்புச் செய்தல்.
நொலேஜ் லங்கா ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம்.
Go To Top