எமது செயற்பாடுகள் நிகழ்ச்சிகள் மற்றும் கருத்திட்டங்கள்.

  • Home
1

ஒட்டுமொத்த இலங்கையும் உள்ளடங்கும் வகையில் கிராமிய மட்டத்தில், கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில், பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில், மாவட்ட செயலக மட்டத்தில் மற்றும் மாகாண மட்டத்தில் பொதுமக்கள் ஆலோசனை மற்றும் அபிவிருத்திக் குழுக்களை நிறுவுதல்.

2

பொதுமக்களின் தேவைகளுக்கு மற்றும் ஒன்றோடொன்று தொடர்புபட்டதாக அமைந்திருக்க வேண்டிய விடயப்பரப்புகளை விஞ்ஞான ரீதியாக ஒப்பீடு செய்து இலங்கையில் காணப்பட வேண்டிய அமைச்சுக்கள் யாவை என்பது பற்றிய ஆவணமொன்றைத் தயாரித்தல், பராமரித்தல் மற்றும் இற்றைப்படுத்துதல்.

மேற்படி ஒவ்வொரு அமைச்சின் கீழ் இயங்க வேண்டிய திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் யாவை என்பது தொடர்பிலான ஆவணமொன்றைத் தயாரித்தல், பராமரித்தல் மற்றும் இற்றைப்படுத்துதல்.

அவ் ஒவ்வொரு திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களுக்குரிய விடயங்கள் மற்றும் பணிகள் யாவை என்பது பற்றிய ஆவணமொன்றைத் தயாரித்தல், பராமரித்தல் மற்றும் இற்றைப்படுத்துதல்.

மேற்படி ஆவணங்களை நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்து செயற்படுத்திக்கொள்வதற்கு அழுத்தம் கொடுத்தல்.

3
பின் வரும் விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பங்களிப்பை வழங்குதல்.
  • தலைமைத்துவம், தொழில்முயற்சியாண்மை மற்றும் தனிநபர் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை செயற்படுத்துதல்.
  • கல்விசார் நிகழ்ச்சிகள் மற்றும் கல்விசார் கருத்தரங்குகளை நடாத்துதல்.
  • மனித வள முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிகழ்ச்சிகளை நடாத்துதல்.
  • வியாபாரக் கற்கைகள், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் பற்றிய அறிவை வழங்குதல்.
  • வரையறுக்கப்பட்ட (பொது) நிறுவனங்களை / பட்டியல்படுத்தப்படாத பொது நிறுவனங்களை தாபித்தல்.
  • வியாபாரம், சந்தைப்படுத்தல், பொதியிடல் செயலமர்வுகளை நடாத்துதல், சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளல் மற்றும் முதலீட்டாளர்களை கருத்திட்டங்களுடன் ஒருங்கிணைப்புச் செய்தல்.
  • மத்திய அரசு, மாகாண சபைகள், உள்ளூராட்சி நிறுவனங்களுடன் மிகநெருக்கமான தொடர்புகளைப்பேணி நடவடிக்களை மேற்கொள்ளல்.
  • வெளிநாட்டு மொழி அறிவைப் பெற்றுக்கொடுத்தல் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை மொழிபெயர்ப்புச் செய்தல்.
  • செவிப்புல – கட்புல சேவைகளை பேணிச்செல்லல்.
  • வெகுசன ஊடகம், தகவல் மற்றும் தொடர்பாடல் பற்றிய அறிவைப் பெற்றுக்கொடுத்தல்.
  • வெகுசன ஊடகங்களைப் பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் விற்பனை வலையமைப்பொன்றினை உருவாக்குதல்.
  • நாட்டின் கிராமிய சந்தைகளை (ஞாயிறு சந்தை, புதன் சந்தை) தொடர்புபடுத்தி பிரதான நகரங்களில் சந்தைகளை நடாத்துதல்.
  • உற்பத்தியாளர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளைத் தேடிக்கொடுத்தல்.
  • இளைஞர் – யுவதிகளை வெளிநாட்டு சந்தைகள் மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நிகழ்ச்சிகளில் பங்குபற்ற வைத்தல்.
  • குறைந்த வருமானம் பெறுகின்ற மக்களுக்கு கணினி, இணையதள, மின்னஞ்சல், வலைத்தள வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைத்தல்.
  • புவியியல் தகவல் கட்டமைப்பை பேணிச்செல்லல்.
  • முதியோர் நூலகங்கள் மற்றும் விசேடமாக சிறுவர்களுக்கான நூலக வசதிகளை ஏற்படுத்துதல்.
  • தொலைக்கட்சி சேவை, வானொலிச் சேவை, சமூக ஊடக வலையமைப்புகளை ஆரம்பித்தல்.
  • பத்திரிகை மற்றும் சஞ்சிகைகளை வெளியிடுதல்.
  • செய்மதித் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றிய அறிவைப் பெற்றுக் கொடுத்தல்.
  • ஆவணத் திரைப்படங்கள், குறுந்திரைப்படங்கள், காணொளிப் பதிவுகளை தயாரித்தல் மற்றும் காட்சிப்படுத்துதல்.
  • உள்ளூர் மற்றும் வெளிநாட்டு; வர்த்தகங்கள், கைத்தொழில்களை விவசாய சபைகளில் பதிவு செய்யும் பொருட்டு முயற்சியாளர்களுக்கு வழிகாட்டுதல்.
  • உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்குரிய கைத்தொழில் மற்றும் சேவைக் கண்காட்சிகளை பிரதேச மற்றும் மாகாண மட்டங்களில் நடாத்துதல்.
  • வியாபார, அரசியல், மொழி மற்றும் கொள்கை உருவாக்கம் பற்றிய கற்றல்களுக்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விசார் பீடங்களை ஆரம்பித்தல்.
  • ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழக கட்டமைப்புக்களுடன் ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்துதல்.
  • வெளிநாடுகள் மற்றும் இலங்கையிலுள்ள பிரதேச செயலகங்களுக்கிடையில் தனிநபர் பரிமாற்று நிகழ்ச்சிகள் மற்றும் அறிவைப் பரிமாறிக்கொள்ளல்.
  • இலங்கை – வெளிநாட்டு நட்புறவுச் சங்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துதல் மற்றும் வெளிநாடுகளிலுள்ள பிரதான நகரங்களுடன் நட்புறவு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுதல்.
  • வியாபாரத் தரவுகள் மற்றும் புள்ளிவிபரத் தகவல்களை சேகரித்து பகிர்ந்தளித்தல்.
  • நம்பிக்கை பொறுப்பு நிதியமொன்றினைப் பேணுதல்.
  • பின்னாய்வு மற்றும் சேவைப் பாராட்டு நிகழ்ச்சிகளை நடாத்துதல்.
  • லீன் முறைமை மற்றும் 5எஸ் முறைமை போன்ற நேர முகாமைத்துவம் மற்றும் உற்பத்தித்திறன் எண்ணக்கரு பற்றிய உற்பத்தி மற்றும் சேவைக் கைத்தொழில் அறிவினைப் பெற்றுக் கொடுத்தல்
  • தரக்கட்டுப்பாடு மற்றும் சர்வதேச தர நியமங்கள் பற்றிய அறிவினைப் பெற்றுக் கொடுத்தல்.
  • இயற்கை, சூழல் பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிகழ்ச்சிகளை நடாத்துதல்.
  • வளவாளர்கள் மற்றும் கிராமிய வளங்களை ஒன்றிணைத்தல் மற்றும் அந்த வளவாளர்களை பாராட்டிற்குட்படுத்துதல்.
  • அச்சிடல், வெளியீடு, பொதியிடல், விளம்பரம், புகைப்பட மற்றும் ஒளிப்பதிவு பற்றிய அறிவினைப் பெற்றுக் கொடுத்தல்.
  • துறைமுகங்கள் மற்றும் விமான நிலையச் சேவைகள் தொடர்பிலும் அச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக விமான மற்றும் கடற்சார் பிரதிநிதி நிறுவனங்களுடன் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலுமான அறிவினைப் பெற்றுக் கொடுத்தல்.
  • அரச மற்றும் தனியார் பங்கேற்பின் கீழ் கூட்டு அபிவிருத்தி நிகழ்ச்சிகளை நடாத்துதல்.
  • பல்வேறு துறைகளுக்குரியதாக நடைமுறைப் பயிற்சிகளைப் பெறுவதற்காக பல்வேறு நிறுவனங்களுக்கு நபர்களை ஆற்றுப்படுத்துதல்.
  • நியாயமான வியாபாரத்தினை மேற்கொள்ளும் பொருட்டு வியாபாரிகள் மற்றும் பொது மக்களை தெளிவூட்டுதல் மற்றும் அது தொடர்பிலான அழுத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல்.
  • ஆரம்பநிலை பொருட்களாக ஏற்றுமதி செய்யப்படுகின்ற மூலப்பொருட்கள் மற்றும் பண்டங்களுக்கு பதிலாக உயர் பெறுமதியுடையதாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு ஊக்குவித்தல்.
  • குளங்களை புனரமைப்புச் செய்தல், நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ நிகழ்ச்சிகளை நடாத்துதல்.
  • நச்சுத்தன்மையற்ற உணவு (மரக்கறி/பழங்கள்/தானியங்கள்) உற்பத்திக்கு மக்களை தூண்டுதல்.
  • உள்ளூர் உணவுகளின் உற்பத்தி மற்றும் ஆயுர்வேத மூலிகைச் செடி நடுகை மற்றும் வண்ணப் பூச்செடிகள் மற்றும் மலர் வளர்ப்பிற்கு பங்களிப்புச் செய்தல்.
  • உடல் மற்றும் உள சமநிலையைப் பேணிச் செல்வதற்காக ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்துவதும், மனம், வாக்கு, காயம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக ஆன்மிக நிகழ்ச்சிகளை, யோகா மற்றும் தியான நிகழ்ச்சிகளை நடத்துதல்.
  • முன்பள்ளிகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்.
  • இரத்தசோகைப் பாதிப்பிற்குள்ளான கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கான உணவுகளை வழங்குதல்.
  • கண் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை நடாத்துதல்.
  • வறுமையை ஒழிப்பதற்காக ஆக்கபூர்வமான மற்றும் நடைமுறைச் சாத்தியமான நிகழ்ச்சிகளை செயற்படுத்துதல்.
  • மறைந்த நூலாசிரியர் கலாநிதி ஈ.டப். அதிகாரம் அவர்களால் எழுதப்பட்ட “சித்துவிளி” (எண்ணங்கள்) நூலை மீள அச்சிட்டு மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளித்தல்.
  • அனல் மின் மற்றும் காரியம் தொடர்புடைய பட்டரி உற்பத்தி உள்ளிட்ட புத்தாக்கங்களை மேற்கொள்வதற்கு பங்களிப்புச் செய்தல்.
  • கனிய வளங்கள், கடல் வளம், ரசாயன வளங்களைப் பயன்படுத்தி உள்நாட்டுக் கைத்தொழில்களை முன்னேற்றுதல் மற்றும் ஏற்றுமதி பன்முகப்படுத்தலுக்கு முன்னுரிமை அளித்தல்.
Go To Top